சென்னை அருகே அதிர்ச்சி அளவுக்கு அதிகமாக மது குடித்த மாணவி உயிரிழப்பு - நடந்தது என்ன முழு விவரம்?
சென்னை அருகே அதிர்ச்சி அளவுக்கு அதிகமாக மது குடித்த மாணவி உயிரிழப்பு - நடந்தது என்ன முழு விவரம்?
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, படூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தன் தோழியுடன் நேற்று இரவு முழுவதும் மது குடித்துள்ளார். போதையில் அளவுக்கு அதிகமான மதுவை அருந்திய நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பிரேதத்தை கைப்பற்றிய கேளம்பாக்கம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணை செய்து வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிசாரணை நடைபெற்று வருகிறது.
Tags: தமிழக செய்திகள்