Breaking News

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா பெற வழிமுறை என்ன விண்ணப்பிப்பது எப்படி முழு விபரம்

அட்மின் மீடியா
0

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா பெற ழிமுறை என்ன முழு விபரம்

தமிழகம் முழுவதும் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 
             

பயன்பாட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள், கல்லாங்குத்து, புறம்போக்கு, கிராம நத்தம், அரசு நஞ்சை மற்றும் புஞ்சை மற்றும் பிற புறம்போக்கு நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்கப்படும். நீர் நிலைகள், கோவில், வழிபாட்டு தலம் மற்றும் வக்பு வாரியத்தின் பட்டா நிலங்கள், ஒன்றிய அரசு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பட்டா பெற முடியாது.

▪️ நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது

▪️ சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா

▪️ மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா

▪️ 3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா

உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை

பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மின்சார கட்டண ரசீது, கேஸ் இணைப்பு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, சொத்துவரி ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

கிராம நிர்வாக அலுலவர் இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்க வேண்டும். இதன்பிறகு மாவட்ட ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டு குழு தாலுகா அளவிலான குழு நிலத்தை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் தகவலின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழுவில் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
3 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும். 3 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள் அந்த நிலத்தின் மதிப்பை செலுத்தினால் பட்டா வழங்கப்படும். 

இந்த சிறப்பு பட்டா வழங்கும் திட்டம் இந்த திட்டம் 31 டிசம்பர் 2025ம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இலவச வீட்டு மனை பட்டா பெறுவது எப்படி

பொதுவாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை அரசு வழங்கமாக வைத்துள்ளது. அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகளை கட்டி, அரசு குடியமர்த்துகிறது. கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடியில் அவர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள்.யார் விண்ணப்பிக்கலாம்அதேநேரம் ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் 

பட்டா பெற விண்ணப்பிப்பவர் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது. 
பட்டா வாங்க விரும்புவோர் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது. 

அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் இருக்க வேண்டும்.

குடும்ப அட்டை, 

ஆதார் அட்டை, 

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு.. 

வருமானச்சான்று.. 

 எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு உள்ளது என்பதை அறிந்து அந்த பகுதியை குறிப்பிட்டு மனு அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு போன்றவற்றிற்கும் மனு அளிக்கலாம்.அரசு தற்போது 86000 பேருக்கு பட்டா வழங்க போகிறது. அதன் விவரங்களையும் பார்ப்போம். அரசின் அரசாணையின் படி, "சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.

பட்டா பெற வாய்ப்பு உள்ள நிலங்கள்:-

ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களாக மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள்,

கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், 
கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சை நிலங்கள், 

எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் 

பட்டா கிடைக்காத நிலங்கள்

சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், 

மேட்டு நிலங்கள், 

மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், 

ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், 

அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback