சென்னையில் பயங்கரம் வழக்கறிஞர் வெட்டி கொலை வீட்டிற்க்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம் நடந்தது என்ன முழு விவரம்
சென்னையில் பயங்கரம் வழக்கறிஞர் வெட்டி கொலை வீட்டிற்க்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம் நடந்தது என்ன முழு விவரம்
சென்னை விருகம்பாக்கம், கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த 2 நாட்களாக பூட்டிக் கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்தது. திறந்து கிடந்த பின்புற கதவு வழியாக போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அந்த வீட்டின் உள்ளே ஒருவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வெங்கடேசன் என்றும் அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் தெரியவந்தது. இவர் அந்த வீட்டில் தன்னுடைய நண்பர் சேதுபதி என்பவருடன் சேர்ந்து வாடகைக்கு தங்கி இருந்தார்.
தற்போது அவர் சடலமாக கிடக்கும் நிலையில் அவருடைய நண்பர் சேதுபதி தலைமறைவாகி விட்டார். மேலும் சேதுபதி தலைமறைவான நிலையில் அவர் பிடிபட்டால் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்