கேஜிஎஃப் வில்லன் நடிகர் கருடா ராம் இஸ்லாத்திற்கு மாறினாரா? உண்மை என்ன முழு விபரம் இதோ Did KGF villain Garuda Ram convert to Islam? fact is here
கேஜிஎஃப் வில்லன் கருடா ராம் இஸ்லாத்திற்கு மாறினாரா? உண்மை என்ன முழு விபரம் இதோ Did KGF villain Garuda Ram convert to Islam? fact is here
பரவிய செய்தி:-
கேஜிஎஃப் வில்லன் கருண் ராம் இஸ்லாத்திற்கு மாறினார் என ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். KGF Villain Ramachandra Raju Aka Garuda Ram Accepted islam
கேஜிஎஃப் பட வில்லன் நடிகர் கருடா ராம் இஸ்லாம் மதம் மாறினாரா: உண்மை என்ன:-
கடந்த சில நாட்களாக பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் கருடா ராம் பற்றிய ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் காணொளியில், கருடா ராம் இஸ்லாமிய தொப்பியை அணிந்து ஒரு மசூதியில் காணப்படுகிறார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் காணொளியில் கூறப்பட்டுள்ளது.
கருடா ராம் என்று அழைக்கப்படும் கன்னட நடிகரின் முழு பெயர் Ramachandra Raju Aka Garuda Ram இராமச்சந்திர ராஜு அகா கருடா ராம் ஆகும்.
இவர் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார் இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப் படங்களில் நடித்துள்ளார்
மேலும் கே.ஜி.எஃப் அத்தியாயம் 1 என்ற படத்தில் ‘கருடா’ என்ற வில்லன் கதா பாத்திரத்தில் நடித்த இவர் புகழ் பெற்றார்.
மேலும் தமிழில் சுல்தான் கோடியில் ஒருவன் , யானை அரண்மனை 4 மற்றும் ஹிட் லிஸ்ட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
கருடா ராம் இஸ்லாம் மதம் மாறிவிட்டார் என பலரும் சமூக ஊடகங்களில் ஷேர் செய்யும் அந்த வீடியோ பொய்யானது ஆகும்
கருடா ராம் கடந்த 06.03.2025 அன்று டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள kalan masjid க்கு சென்றுள்ளார். அங்கு இருந்த இமாம்கள், ஹஜ்ரத்கள் அவரை வரவேற்றுள்ளனர், மேலும் அவருக்கு இஸ்லாம் பற்றி கூறியுள்ளார்கள்.
இந்த செய்தியை இந்தியில் ஆதான் என்ற இந்தி செய்தியின் யூடியூப் சேனலில் கேஜிஎஃப்-ன் கருடா ராம் மசூதிக்கு சென்றார், தொப்பி மற்றும் குர்தாவில் ஒரு புதிய தோற்றத்தில் இருந்தார் என்று கூறுகிறது.
மேலும் கருடா ராமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாங்கள் ஆராய்ந்தோம். அதில் அவர் தான் இஸ்லாம் மார்க்கத்திற்க்கு மாறியதாக எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை
அதேபோல் கருடா ராம் சென்ற மசூதி நிர்வாகமும், அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை என்பதை தெளிவுபடுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார்கள்
முடிவு:-
தென்னிந்திய திரைப்பட நடிகர் கருடா ராம் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அட்மின்மீடியா குழுவின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/shorts/bzK71X7RdI8
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:
https://www.instagram.com/rab_rasool_se_mohabbat/reel/DG7mMH8TiqX/
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:
https://www.instagram.com/p/DHAFTH-yl4S/
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: FACT CHECK மறுப்பு செய்தி