Breaking News

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு Edappadi Palanisamy to Meet Amit Shah

அட்மின் மீடியா
0

மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில்  தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்துள்ளார்.Edappadi Palanisamy to Meet Amit Shah

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். 

மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய முன்னாள் அதிமுக அமைச்சர்களும், அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை ஆகியோரும் உடன் இருந்தனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்த நிலையில் அதன் பிறகு தமிழக பாஜகவினர் – அதிமுக இடையேயான பல்வேறு கருத்து மோதல்களை அடுத்து இந்த கூட்டணி முறிவுக்கு வந்தது. அதன் பிறகு வந்த 2024 நடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்றவர், கடந்த சில நாட்களாக தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாற்றி, மாற்றி பேச ஆரம்பித்தார்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜகவின் தலைவர்கள் யாரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இந்த நிலையில் அமித்ஷா உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback