Breaking News

இனி ஏடிஎம், மற்றும் GPay, Phonepe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம் - முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

இனி ஏடிஎம், மற்றும் GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம் - முழு விவரம் இதோ

பிஎஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகள் போல் மாறும்; ஏடிஎம் போல் இனி பிஎஃப் கணக்கிலிருந்தும் பணம் எடுக்க முடியும்

கிளெய்ம்களை விரைந்து செயல்படுத்துவது, முகவரி உள்ளிட்ட விவரங்களில் விரைவான திருத்தம், எந்த வங்கியிலிருந்தும் பிஎஃப் ஓய்வூதியத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.0 திட்டத்தின் கீழ் வழங்கப்படும்

- மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கு வகையிலான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றன.மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் 3.0 (EPFO 3.0) என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்தத் திட்டத்தின் படி தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இல் இருந்து எப்படி பணம் எடுக்கிறோமோ அதேபோல எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதில் கணக்கு வைத்திருக்கக்கூடிய தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு தேவை ஏற்படும் போது பணத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம்.திருமணம், பிள்ளைகளின் கல்வி, வீடு வாங்குவது போன்ற செயல்களுக்கு விண்ணப்பம் செய்து ஆன்லைனில் இருந்து எளிதாக பணம் பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த நிலையில் மத்திய அரசு இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback