Breaking News

மியான்மர் நாட்டில் ஏற்ப்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கம் வைரல் வீடியோ myanmar earthquake

அட்மின் மீடியா
0

மியான்மர் நாட்டில் ஏற்ப்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கம் வைரல் வீடியோ 

மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. மியான்மரில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இடிபாடுகளில் சிக்கி 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் நடக்கும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. 

மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக மியான்மர், தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 7.7 ரிக்டர் திறன் கொண்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வழிபாட்டு தலங்கள் இடிந்தன. மீண்டும் சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 350 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நீடிக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் அடைந்துள்ளனர்.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு மியான்மர் தயார் நிலையில் இல்லை. இதனால் அங்கு அவசரநிலை அறிவித்துள்ள ராணுவத் தலைவர் மின் அனுக் லாய்ங், சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடியுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1905802774656458806

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback