Breaking News

சவூதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டது நாளை பெருநாள் என அறிவிப்பு saudi crescent moon sighting

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டது நாளை பெருநாள் என அறிவிப்பு saudi crescent moon sighting


சவுதி அரேபியாவில் இன்று சனிக்கிழமை (29-03-2025) ஷவ்வால் பிறை தென்பட்டது, (30-03-2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும். Saudi Arabia announces Sunday as first day of Eid Al Fitr after sighting Shawwal crescent

சவூதி அரேபியாவில் இன்று மாலை மார்ச் 29, சனிக்கிழமை அன்று ஷவ்வால் பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மார்ச் 30 (நாளை) ஈத் அல் ஃபித்ர் தினமாக கொண்டாடப்படும் என்று சவூதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களையும் சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பிறை பார்க்கப்பட்டதாக தற்சமயம் அறிவிப்பு வெளியானதைத் அடுத்து அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரக குடியிருப்பாளர்கள் நாளை ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் சவூதி அரேபியாவை பின்பற்றும் என்பதால் நாளை ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback