தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்ன முழு விவரம் Tn Budget 2025
தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்ன முழு விவரம் Tn Budget 2025
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
பட்ஜெட் சிறப்பம்சங்கள்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு
வேளச்சேரியில் ரூ.310 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறாதவர்களும் பயன்பெறும் வகையில், புதிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும். இதன்மூலம் மேலும் பல மகளிர் பயன்பெறுவார்கள்.
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு! இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு
ரூ.10 கோடியில் மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையம்மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்
சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்; 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும்
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2000 அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க ஏற்பாடு செய்யப்படும்.
திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்
ரூ.83 கோடி செலவில் குழந்தைகள் நல மைய கட்டடங்கள் அமைக்கப்படும்.
2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ. 20,000 மானியம் வழங்கப்படும் .
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
பூந்தமல்லி - போரூர் இடையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு
தனுஷ்கோடியில் புதிதாக பறவைகள் சரணாலயம் ஒன்று அமைக்கப்படும்
1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யப்படும்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள உயர்வாய்ப்பு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படும்.
10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி.
புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் ரூ.77 கோடியில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்
ரூ.275 கோடியில் முன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்
சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் ஒருங்கிணைந்த புதிய நகரம் அமைக்கப்படும்
675 கோடி ரூபாய் மதிப்பில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்
மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பத்தை தடுக்க 400 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்படும்.
வேளச்சேரி - குருநானக் சாலையில் ரூ.110 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்.
திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் அமைக்கப்படும்.
சென்னையில் 7 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரகப் பகுதியில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்
எழும்பூர் அருங்காட்சியகத்தில் மரபுசார் கட்டட கலை அரங்கு அமைக்கப்படும்
சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ் புத்தகக் காட்சி நிகழ்வு நடத்த 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000
ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்!
இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்!
அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயலாக்கம்
2025-28 ஆம் ஆண்டில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்
கல்லூரி மாணவர்களுக்கு கணினி
பத்து இலட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்