ஹலால் என்றால் என்ன? ஏன் இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடுகின்றார்கள்? தெரிந்து கொள்ளுங்கள் What is Halal? Why do Muslims eat Halal meat?
ஹலால் என்றால் என்ன? ஏன் இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி உணவை சாப்பிடுகின்றார்கள்? தெரிந்து கொள்ளுங்கள் What is Halal? Why do Muslims eat Halal meat?
ஹலால் என்றால் என்ன?
ஹலால் உணவு வழிகாட்டுதல்கள் மூன்று முக்கிய ஆதாரங்களில் இருந்து வருகின்றன. முதலாவது குர்ஆன், இது அனுமதிக்கப்பட்டவை அல்லது தடைசெய்யப்பட்டவை பற்றிய தெளிவான விதிகளை வழங்குகிறது.
ஹலால் என்பது சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தமாகும். (حلال - Halal).
அதேபோல் ஹராம் என்றால் சட்டவிரோதமானது அல்லது தடை செய்யப்பட்டது என்று அர்த்தமாகும்
இஸ்லாத்தில் ஹலால் / ஹராம் என்பது உணவில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என பலரும் நினைக்கின்றார்கள்
ஆனால் ஓர் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையில் அனைத்திலும் ஹலால் ஹராம் உள்ளது
உதாரணத்திற்கு உண்மை பேசுவது ஹலால், பொய் சொல்வது ஹராம்" அதுபோல் தவறான செயல்களான மது அருந்துவது, கொள்ளை அடித்தல். கொலை செய்தல், திருடுதல், மற்றவரை துன்புறுத்தல், தீய வழியில் பொருள் சேர்த்தல் வட்டிக்கு கொடுத்தல், போன்றவையும் ஹராமாகும்.
ஹலால் உணவு
ஹலால் செய்யப்பட்ட இறைச்சியைதான் சாப்பிட வேண்டும் என்று அல் குரானில் இறைவன் கட்டளையிட்டுள்ளான்
மேலும் ஆடு, மாடு, கோழி ஒட்டகம் போன்ற நாம் உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும்.
கழுத்தின் முன்பக்கத்தில் கூர்மையான கத்தியால் அந்த விலங்கின் கழுத்தை அறுத்து விடுவார். அப்போது அந்த விலங்கின் கழுத்திலிருந்து மிக அதிக அளவில் ரத்தம் வெளியேறும். ரத்தம் வெளியேறும் சமயத்தில் அந்த விலங்குகளின் கால்களும், உடலும் துடிதுடிக்கும். சிறிது நேரத்தில் அந்த விலங்கு இறந்து விடும்.
மேலும் அறுக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி' என்று கூறி பின் அறுப்பார்கள்
இதனால் என்ன நன்மை:-
ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும்.
இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
ஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.
ஹலால் முறைப்படி ஒரு பிராணி அறுக்கப்படும் முறை:- Halal method of slaughtering an animal
அந்த பிராணி அறுப்பதற்கு முன்பு இறந்திருக்க கூடாது, காரணம் அதன் உடலில் அதனுடைய இரத்தம் உறைந்த நிலையில் தேங்கிவிடக்கூடாது.
கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
அதை அறுப்பவர் கடவுளின் பேரைச்சொல்லி அறுக்க வேண்டும், அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை(பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்) எனகூறி அந்த பிராணியை தடவிக்கொடுத்து சிறிது தண்ணீர் புகட்டப்பட்டு பின்பு அமைதியாக அது அறுக்கப்பட வேண்டும்
அறுக்கும் போது கால்நடைகளின் கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். இப்படி செய்தால் அந்த பிராணி வலியின்றி உயிரிழக்கும்.
அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்
மேலும் இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்க படுகிறது
வலி இருக்காது:-
சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் அறுக்கும் போது போது வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.
Tags: மார்க்க செய்திகள்