ஏப்ரல் 1 முதல் அமலாகியுள்ள 7 புதிய மாற்றங்கள் முழு விவரம் இதோ..!
ஏப்ரல் 1 முதல் அமலாகியுள்ள 7 புதிய மாற்றங்கள் முழு விவரம் இதோ..!
புதிய வருமான வரி
புதிய வருமான வரி அடுக்குகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில், வருடம் ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வரிவிலக்கு பெறுவார்கள். இந்த புதிய வருமான வரி விதி நடுத்தர வகுப்பிற்கு பெரிய நன்மை அளிக்கும் வகையில் உள்ளது.
ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் யாருக்கெல்லாம் தெரியுமா
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள் வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் என்ற புதிய விதிமுறையை National Payments Corporation of India அறிவித்துள்ளது. செயலற்ற எண்களிலிருந்து (Inactive Mobile Numbers) இனி UPI பரிவர்த்தனைகள் நடக்காது என்பதை உறுதி செய்கிறது.
புதிய ஓய்வூதிய திட்டம்:-
2024 ஆகஸ்ட் மாதம் அறிமுகமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme - UPS), ஏப்ரல் 1, 2025 முதல் முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த திட்டம் பழைய ஓய்வூதிய முறையை மாற்றி, சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது.
கொடைக்கானல், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்க்கு தினமும் 6,000 வாகனங்கள் மட்டுமே அனுமதி
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது வரை விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இபாஸ் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை ஒரு நாளுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுப்பாட்டை கடந்த மாதம் விதித்தது.
ஏப்ரல் 1 முதல் பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி ஏப்ரல் 1 முதல் ரூ.பத்து லட்சம் வரை மதிப்பிலான வீடு, விவசாய நிலம் மற்றும் மனை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு.
ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
ஏப்ரல் 1ம் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ரிவார்ட் பாயிண்ட்கள்
SBI Simply CLICK மற்றும் Air India SBI Platinum கிரெடிட் கார்டுகளின் ரிவாட்ஸ் புள்ளிகளின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Axis வங்கி , Air India இணைப்பு, Vistara கிரெடிட் கார்டு நன்மைகளில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்