Breaking News

பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால் 1% சலுகை எந்தெந்த சொத்துக்களுக்கு பொருந்தும் மற்றும் பொருந்தாது முழு விவரம்

அட்மின் மீடியா
0

எந்தெந்த சொத்துக்களுக்கு பொருந்தும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கு பதிவுக்கு ஒரு சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. 

எந்தெந்த சொத்துக்களுக்கு பொருந்தும் மற்றும் பொருந்தாது என பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை.

                       

மாண்புமிகு தமிழக நிதியமைச்சர், மார்ச் 14, 2025 அன்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து, "ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களுக்கும், பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது, 01.04.2025 முதல் பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும்" என்று அறிவித்தார்.

மேலும் மேற்படி அறிவிப்பின்படி பார்வை(2)-ல் காணும் வெளியிடப்பட்ட அரசாணையை பதிவு அலுவலகங்களில் செயல்படுத்தலில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும், சலுகையை உரிய மகளிர்கள் பெறுவதற்கும் பின்வரும் அறிவுரைகளும் தெளிவுரைகளும் இந்த சுற்றறிக்கை மூலமாக வழங்கப்படுகிறது.

(1) இந்த சலுகை மகளிர் பெயரில் சொத்துகள் வாங்கும் விற்பனை ஆவணங்களுக்கு மட்டுமே என்பதால், இந்த சலுகை, சொத்தை வாங்குபவர் ஒரு பெண்ணாக இருந்தாலோ அல்லது அது பெண்கள் பெயரில் கூட்டாக

வாங்கப்பட்டாலோ, சொத்தினை வாங்குபவர்கள் அனைவரும் பெண்களாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

கீழ்காணும் விவரங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
சலுகை பொருந்தும் இனங்கள்

(1 ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து அதில் பெண்கள் பெயரில் மட்டுமே சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.

(ii) ஒரு சொத்தினை குடும்ப நபர்கள் சேர்ந்து அதில் பெண்கள் பெயரில் மட்டுமே சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.

சலுகை பொருந்தாது இனங்கள்

(i) ஒரு சொத்தினை கூட்டாக கணவன் மனைவி சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தாது.

(i) ஒரு சொத்தினை குடும்ப நபர்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.

(iii) ஒரு சொத்தினை குடும்பம் அல்லாத நபர்கள் சேர்ந்து அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.

(iv) ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.
ஆவணங்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட பதிவு கட்டணம் திரும்பப் பெற முடியாது.

(3) பதிவு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் நிலவும் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பின்படி சொத்தின் மதிப்பு 10 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் இந்தச் சலுகையைப் பெறுவதற்காக ஒரு சொத்தை வேண்டுமென்றே பல பகுதிகளாகப் பிரிக்கக்கூடாது.

கீழ்காணும் விவரங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
சலுகை பொருந்தும் இனங்கள்

(i) ஒரு 2400 சதுரடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000/- வருகிறது. இந்த காலிமனையினை இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடி பிரித்து ஆவணங்கள் வேறு வேறு பெண்கள் (குடும்ப நபர்கள் (அ) குடும்ப நபர்கள் இல்லாமால்) பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.

(ii) ஒரு 2400 சதுரடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000/- வருகிறது. இந்த காலிமனையினை இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடி பிரிபாடத ஆவணங்களாக வேறு வேறு பெண்கள் (குடும்ப நபர்கள் (அ) குடும்ப நபர்கள் இல்லாமால்) பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.

(ii) ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் கிரையம் ஆவணங்களுக்கு கூட்டு வழிகாட்டி மதிப்பு மற்றும் இரண்டாவது கிரையம் ஆவணங்களுக்கு சந்தை வழிகாட்டி மதிப்புடன் பொதுபணித்துறை கட்டிட மதிப்பு சேர்த்து (அடுக்குமாடி வீடு மற்றும் பரிபடாத பாக மனை

பதிவுக்கட்டண சலுகை ஆவணத்தின் களஆய்வுக்கு பின் ஏதோனும் கட்டிட மதிப்பில் குறைவு இருப்பின் அந்த கட்டிட மதிப்பு குறைவுடன் சேர்த்து 1% பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

(5) இந்திய முத்திரைச் சட்டம், 1899 பிரிவு 47A (1) இன் கீழ் சந்தை மதிப்பை நிர்ணயிப்பதற்காக ஆவணங்கள் அனுப்பப்படும் நேர்வில் தனித்துளை ஆட்சியார் (முத்திரை) அல்லது தலைமை கட்டுப்பாட்டு வருவாய் அதிகாரி அல்லது உயர் நீதிமன்றத்தால் சொத்தின் மதிப்பை நிர்ணயித்த பின் ரூ.10,00,000/-க்கு மேல் சொத்தின் மதிப்பு வரும் நிலையில் இந்த சலுகை பொருந்தாது. மேலும் இந்நிகழ்வில் ஆவணப்பதிவின் போது சொத்தின் மதிப்பு ரூ.10,00,000/- க்கு கீழே ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தாலும் 2% பதிவுக்கட்டணமே வசூலிக்கப்படவேண்டும். இ.மு.ச. பிரிவு 47A (1)-ன் நடவடிக்கை முடிந்து குறைவு முத்திரைத்தீர்வை மற்றும் குறைவு பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும் போது இந்த சலுகை வழங்கப்படும்.

மேலும் இவ்விவரங்களை கருத்தில்கொண்டு பதிவு அலுவலர்கள் உரிய நபர்களுக்கு ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் போது அளிக்கப்பட்ட சலுகை சரியாக உள்ளதா என்று சரிபார்த்து ஆவணங்கள் பதிவுக்கு ஏற்கப்பட வேண்டும்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் நிர்வாக மாவட்டப்பதிவாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். இதில் ஏதும் தவறாக சலுவை அளிக்கப்பட்டலோ அல்லது அளிக்க வேண்டிய சலுவை உரிய நபர்களுக்கு அளிக்கப்படாமல் பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டாலும் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்களின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இச்சுற்றறிக்கையினை பெற்றுக் கொண்டமைக்கு சார்பதிவாளர்கள், மாவட்டப்பதிவாளர்களுக்கும் மாவட்டப்பதிவாளர்கள் துணைப்பதிவுத்துறை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback