Breaking News

புதிய 10 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்


ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி உள்ளது. 

அதேநேரத்தில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் கூறி உள்ளது

புதிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுனர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும். அவர் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மல்கோத்ரா கையெழுத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback