Breaking News

மலேசியா கோலாலம்பூர் அருகே எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து 100க்கும் மேற்ப்பட்டோர் காயம் வீடியோ Burst gas pipe sparks colossal fire in Malaysia

அட்மின் மீடியா
0
மலேசியா கோலாலம்பூர் அருகே எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து 100க்கும் மேற்ப்பட்டோர் காயம் Burst gas pipe sparks colossal fire in Malaysia


மலேசியாவின் தலைநர்  கோலாலம்பூருக்கு அருகாமையில் எரிவாயு குழாய் வெடித்து தீ பிடித்ததில் இதுவரை  90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ் என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் குழாயில் காலை வெடிப்பு ஏற்பட்டது 

தீயை அணைக்கவும், சிக்கியவர்களை மீட்கவும் மலேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  பாதிக்கப்பட்டவர்களை செலங்கோர் பேரிடர் மேலாண்மை குழு, புத்ரா ஹைட்ஸ் மசூதியின் பல்நோக்கு மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

மேலும், இன்னும் இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1907055027379998989

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback