சென்னை மக்களே கவனம்..! ஏப்ரல் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்..! முழு விவரம் இதோ
சென்னை மக்களே கவனம்..! ஏப்ரல் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்..! முழு விவரம் இதோ
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா இந்த மாதம் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு விழா நிறைவடையும் வரையில் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
- ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
- அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கடகிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு செல்லும் வழி:
- ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
போக்குவரத்து மாற்றங்கள்
ஏப்ரல் 5-ம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், 9-ம் தேதி தேர் திருவிழா அன்றும் காலை 6 மணிமுதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 10-ம் தேதி அன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம் 1 மணிமுதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
வாகன நிறுத்த தடை
- ஏப்ரல் 05 அதிகாரநந்தி திருவிழா 09 தேர்திருவிழா அன்றும் 10 அறுபத்து மூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, இராமகிருஷ்ணா மடம் சாலை மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில். வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் இரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனம் மற்றும் 30 கார்).
- இராயபேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மைலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனம் மற்றும் 15 கார்).
- செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனம் மற்றும் 80 கார்).
- வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனம் மற்றும் 20 கார்). வாகன ஓட்டுநர்களும் மற்றும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்