13,500 கோடி வங்கி மோசடிப் புகாரில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது Mehul Choksi
அட்மின் மீடியா
0
13,500 கோடி வங்கி மோசடிப் புகாரில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது Mehul Choksi
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா்.
இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடுகடத்துவதற்கான பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியை கைது செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கைது செய்யப்பட்ட சோக்ஸி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்