இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான விசா தடை - சவூதி அரேபியா அறிவிப்பு
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான விசா தடை - சவூதி அரேபியா அறிவிப்பு
இந்தியா ,பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, நைஜீரியா, ஈராக், ஜோர்டான், மொரோக்கோ, சுடான், துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு ஒரே முறை பயணிக்கக்கூடிய Single-Entry Visa மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது
அதாவது இந்த 14 நாடுகளில் இருந்து சவூதி அரேபியா செல்லும் மக்களுக்கு ஏப்ரல் 14ம் தேதி வரை மட்டுமே விசா என்பது வழங்கப்பட உள்ளது.
அதன்பிறகு உம்ரா விசா, பிசினஸ் விசா, குடும்பத்தினருக்கான விசா உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இந்த விசா நிறுத்தம் என்பது ஹஜ் புனித பயணம் முடிவடையும் ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு ஏப்ரல் 13 வரை வருகை விசா அல்லது உம்ரா விசா வழங்கப்படும். அதன் பிறகு, பட்டியலில் உள்ள 14 நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் புதிய விசா வழங்கப்படாது.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்