Breaking News

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை உருண்டு விபத்துக்குள்ளான கார் 3 பேர் உயிரிழப்பு சிசிடிவி வீடியோ Car flips 15 times

அட்மின் மீடியா
0

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை உருண்டு விபத்துக்குள்ளான கார் 3 பேர் உயிரிழப்பு சிசிடிவி வீடியோ Car flips 15 times, bodies thrown in the air: 3 dead in Karnataka highway crash



கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மோனகல்மூர் தாலுகாவின் பொம்மக்கனஹள்ளி மஜித் அருகே, சல்லகேர் மற்றும் பல்லாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலை-150A இல் இன்று காலை நடந்த ஒரு பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 

சிசிடிவி காட்சிகளில் கார் நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோதி, 15 முறை உருண்டு விபத்துக்குள்ளானதை காட்டுகிறது.

காரை ஓட்டி வந்த மௌலா அப்துல் (35), அவரது இரண்டு மகன்கள் ரெஹ்மான் (15), சமீர் (10) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மௌலாவின் மனைவி சலீமா பேகம் (31), அவரது தாயார் பாத்திமா (75) மற்றும் மற்றொரு மகன் ஹுசைன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த  போலீசார் அவர்களை மீட்டு பல்லாரி விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.யாத்கீரைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் பெங்களூருவில் வசித்து வந்தனர், அங்கு அவர்கள் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1907475169574269108

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback