சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு 15ம் தேதி உள்ளூர் விடுமுறை முழு விவரம்
சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு 15ம் தேதி உள்ளூர் விடுமுறை முழு விவரம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 10.31 மணிக்கு மேல்11.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 17ம் தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 18ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில்
தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான 22ம் தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்படுகிறார்.
இந்நிலையில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும் 15ம் தேதி செவ்வாய்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மே மாதம் 3ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்