Breaking News

வாடிக்கையாளருக்கு கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காத பெட்ரோல் பங்கிற்கு ரூ.1.65 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவு Petrol Pump Denies Women Access To Restroom

அட்மின் மீடியா
0

வாடிக்கையாளருக்கு கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காத பெட்ரோல் பங்கிற்கு ரூ.1.65 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவு Kerala Petrol Pump Fined Rs 1.65 Lakh For Denying Woman Access To Restroom

இரவு நேரத்தில் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காத பெட்ரோல் பங்கிற்கு எதிராக பத்தினம்திட்டா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ரூ.1.65 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார் எழம்குளத்தைச் சேர்ந்த ஜெயகுமாரி என்ற ஆசிரியை!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.

காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அது பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். விசாரித்ததில், பம்ப் ஊழியர்கள் ஆரம்பத்தில் வசதி செயல்படவில்லை என்று கூறினர். பின்னர், மேலாளர் சாவியுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக அவர்கள் கூறினர்.

இதனால் ஜெயகுமாரி, இந்த சம்பவம் குறித்து பய்யோலி போலீசாரிடம் புகார் அளித்தார், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  கழிப்பறையை திறந்தனர். 

இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.

வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். 

அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜெயகுமாரி தகராறு தீர்வு ஆணையத்தை அணுகி நீதியை நிலைநாட்டினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், அனைத்து பெட்ரோல் பம்புகளும் பொதுமக்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை வழங்குவது கட்டாயமாகும் என்று குழு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback