20 வயது இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு - நெல்லையில் பரபரப்பு! நடந்தது என்ன முழு விவரம்
20 வயது இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு - நெல்லையில் பரபரப்பு! நடந்தது என்ன முழு விவரம்
நெல்லையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அந்த இளைஞர் புதைக்கப்பட்ட இடம் தெரியவந்தது.
குழிதோண்டி புதைக்கப்பட்ட உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவகனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து, தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்