திருச்சியில் வயதான முதியவரை வழிமறித்து கையை மடக்கி வாயை பொத்தி வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!
திருச்சியில் வயதான முதியவரை வழிமறித்து வாயை பொத்தி வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!
திருச்சி சிட்டி பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் வெளிப்புற பகுதியில் முதியவர் ஒருவர் கடந்த 4ம் தேதி மாலை 3 மணிக்கு நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற 3 இளைஞர்கள் திடீரென அந்த முதியவரை வழிமறித்தனர்.
அவர்களில் இரண்டு இளைஞர்கள் முதியவரின் இரண்டு கைகளையும் மடக்கி பிடித்துக் கொள்ள ஒரு இளைஞர் முதியவரின் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஒடி விட்டனர்.
முதியவரிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடும் 3 இளைஞர்களின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை, இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, வால்டின் ஜோப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1910499641713451234
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ