பள்ளி விடுமுறையில் ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பலி முழு விவரம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை அருகே வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற வடக்கு கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1. உபைதுல்லா த/பெ முஹிபுல்லா ( 4 ஆம் வகுப்பு) 2. முஹம்மது ஆஃபில் த/பெ. ஜாபர் சாதிக் ( 5 ஆம் வகுப்பு) 3. ஷேக் அப்துல் ரஹ்மான் த/பெ. சாதிக் பாஷா ஆகியோர் உயிரிழந்த பரிதாபம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வெள்ளியங்கால் வாய்க்காலில் நேற்று விடுமுறை தினம் என்பதால், ஐந்து பள்ளி மாணவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். வாய்க்காலில் இழுவை அதிகமாக இருந்ததை அறியாத அந்த சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர்
அப்போது ஓடையில் இருந்த பள்ளத்தில் உபயத்துல்லா(8), முகமது அபில்(10), முகமது பாசிக்(13) ஆகிய மூன்றுபேரும் தவறி விழுந்து உள்ளனர். இதில் தண்ணீரில் விழுந்த மாணவர்களை, மற்ற மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
உடனடியாக அருகில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் வெள்ளியங்கால் ஓடையில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்து, 3 மணிநேரம் போராடி 3 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
கடலுார் அரசு மருத்துவ மனைக்கு சிறுவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிர் உசேன் நகர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (8). இவர் நான்காம் வகுப்பு ஜெ ஹெச் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படித்து வந்தார்.
இரண்டாவது ஜாபர்சாதிக் மகன் முகமது அபில் (10). இவர் ஜெ ஹெச் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
மூன்றாவது சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (13). வடக்கு கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
Tags: தமிழக செய்திகள்