Breaking News

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. சென்னையில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. சென்னையில்3 பேருக்கு பாதிப்பு உறுதி முழு விவரம் இதோ

சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டிப்படைத்தது. 

இந்த நிலையில், சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள 32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அந்த பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback