3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சி..!தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னையில் வரும் ஏப்ரல் 28, 2025 முதல் ஏப்ரல் 30, 2025 வரை 3 நாட்கள் முற்றிலும் இலவச ட்ரோன் பயிற்சி திட்டத்தை வழங்குகிறது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வரும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் வசதியும் உள்ளது. தேவைப்படுவோர் விண்ணப்பித்து இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337.
பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது