ஆந்திராவில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் சிறுவன் பரிதாப பலி Stray dog mauls boy to death
ஆந்திராவில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் சிறுவன் பரிதாப பலி வைரல் வீடியோ 4 Year Old Boy Dead in Stray Dog Attack
ஆந்திர மாநிலம் குண்டூர் ஸ்வர்ண பாரதி நகரைச் சேர்ந்த நாகராஜு - ராணி தம்பதியினரின் நான்கு வயது மகன் ஐசக்குடன் உள்ளூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகராஜு பணிக்கு சென்ற நிலையில் ராணி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்க, ஐசக் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஐசக் மீது பாய்ந்து கடித்து குதறி கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது. சிறுவனை பயங்கரமாகக் கடித்தன.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஐசக் பரிதாபமாக மரணமடைந்தான்.போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ