52,000 இல்லை 10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஹஜ் விசா - சவுதி அரசு அறிவிப்பு
52000 ஆயிரம் ஹஜ் யாத்திரை பயணம் சவுதி அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை உடன்பாடு முழு விபரம்
புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த ஆண்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்த 52,000 ஹஜ் பயணிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்கள் பயணம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது
இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கான 52,000 ஒதுக்கீடுகளுக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000 ஹஜ் பயணிகள், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலமாக அதற்கான கட்டணங்களை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்து, பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒன்றிய சிறுபான்மை நலத்துறை மற்றும் சவுதி அரேபியா அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் ஹஜ் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தை முறையாக அனுப்பி இருக்கின்றனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹஜ் பயணம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மினா முகாம்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த ஆண்டு எந்த நாட்டிற்கும் காலக்கெடு நீட்டிப்புகள் வழங்கப்படவில்லை என்றும் சவுதி அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாக, மினா முகாம்களில் இடங்கள் இருக்கும் பட்சத்தில், 10,000 யாத்ரீகர்களை தங்க வைக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஹஜ் குழு ஆபரேட்டர்கள் ஹஜ் (நுசுக்) போர்ட்டலை மீண்டும் திறக்க சவுதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் வற்புறுத்தலை அடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/MOMAIndia/status/1911982788619706674
Tags: மார்க்க செய்திகள்