கொடைக்கானல், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்க்கு தினமும் 6,000 வாகனங்கள் மட்டுமே அனுமதி முழு விவரம்
கொடைக்கானல், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்க்கு தினமும் 6,000 வாகனங்கள் மட்டுமே அனுமதி முழு விவரம்
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது வரை விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இபாஸ் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை ஒரு நாளுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுப்பாட்டை கடந்த மாதம் விதித்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா வாகனங்கள் நீலகிரிக்கு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி - வழிகாட்டு நெறிமுறைகள் என்ன முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/05/e-pass-for-ooty-apply-online-kodaikanal.html
Tags: தமிழக செய்திகள்