Breaking News

ஏப்ரல் 7-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 7-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழா நடக்க இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை,அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெற உள்ளது

இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி நார்த்தாமலை தேர் திருவிழா நடப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும், தேர்வுகள் அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback