மின்சாரம் தாக்கிய 9 வயது சிறுவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரியல் ஹீரோ வைரல் வீடியோ
மின்சாரம் தாக்கிய 9 வயது சிறுவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரியல் ஹீரோ வைரல் வீடியோ
சென்னை அரும்பாக்கத்தில்,தேங்கிய மழை நீரில் நடந்து சென்ற 9 வயது ராபர்ட் என்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், அந்த வழியாக சென்ற கண்ணன் என்ற நபர் துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி மங்களம் நகர் வழியாக தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற பள்ளி சிறுவன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் கீழே விழுந்து துடிதுடித்த சிறுவனை அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் துரிதமாக செயல்பட்டு மீட்டார்.
இது குறித்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணன் கூறுகையில்
சிறுவனை காப்பாற்றிய போது என்னையும் மின்சாரம் தாக்கியது. சிறுவனை காப்பாற்ற வேண்டும் எண்ணம் இருந்ததால் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினேன். இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/rajnewstamil/status/1913532768367329574
Tags: வைரல் வீடியோ