மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸை என்கவுன்ட்டர் செய்த போலீசார் முழு விவரம்
மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸை என்கவுன்ட்டர் செய்த போலீசார் முழு விவரம்
மதுரையில் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளி போலீசாரால் என்கவுன்ட்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே.குருசாமி, ராஜபாண்டியன். உறவினர்களான இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்பகை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் பழிக்குப்பழியாக பல கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (35) என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சுள்ளான் பாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பங்கஜம் காலனியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (26) என்பவரை தேடி வந்த போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மதுரை சிந்தாமணி பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து தற்காப்புக்காக பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார்.
சுபாஷ் சந்திரபோஸின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்