Breaking News

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வக்ப் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை முழு விபரம் இதோ

அட்மின் மீடியா
0
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வக்ப் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை முழு விபரம் இதோ

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வக்ப் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவக்பு சட்டத்தின் படி புதிய நியமனங்களை மேற்கொள்ள ஒரு வார காலத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு



மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு திருத்த மசோதா இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் மக்களவை, மாநிலங்களவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டம் அமலானது.

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக கட்சிகள், தனிநபர் என பலதரப்பில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது

வக்ஃபு வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நாளை வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் நாளை மதியம் விசாரணைக்கு பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரனையில்:-

வக்பு சட்டத்திற்கு எதிரான இன்றைய விசாரணையில் ஒரு கட்டத்திற்கு மேல் உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்கவே கூடாது என மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்

கடுப்பான நீதிபதிகள் அதை எப்படி நீங்கள் கூற முடியும் இந்த நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளை மதத்துடன் சார்புடையவர்களாக நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என  பதில் அளித்தனர்

ஒரு நிலம் வக்புக்கு சொந்தமானது என ஒருவர் கூறுகிறார் அரசாங்கத்திற்கு சொந்தமானது என அரசாங்கம் சொல்கிறது ஆனால் அதை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது அடுத்தது என்ன நடக்கும் என்பதை தெளிவாக யோசிக்க முடிகிறது அல்லவா அவ்வாறு இருப்பது நியாயமானதுதானா என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்

நாங்கள் இந்த இருக்கையில் அமரும்போது எந்த மதமும் எங்களுக்கு கிடையாது?. அனைத்து தரப்பினரும் சமமே. எவ்வாறு இப்படி நீங்கள் ஒரு ஒப்பீட்டை கூற முடியும்?. அப்படியெனில் இந்து கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதோரை நிர்வாகிகளாக சேர்க்கலாமா?. மேலும் ஆலோசனை வழங்கும் குழுவில் வேறு சமயத்தை சேந்தவரை இந்து கோயில் நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக்கலாமா?.இதற்கு வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி. 

தொடர்ந்து வக்ஃபு மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்:-

ஒருவர் ஐந்து வருடங்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் மட்டுமே வக்ஃபு நன்கொடை வழங்க முடியும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வக்ஃபு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

வக்ஃபு திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் அனைத்தும் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்து அறநிலையத் துறை சட்டத்தின் படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். வக்ஃபு சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

அதற்கு மத்திய அரசு தரப்பில், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஊர் ஊராக சென்று கருத்து கேட்ட பின்னரே சட்டம் இயற்றப்பட்டது என்று தெரிவித்தனர்

இடைக்கால தடை

ஏற்கனவே வக்பு முறை பதிவு செய்யப்பட்டோ அல்லது படாமலோ எத்தகைய நடைமுறையில் தற்பொழுது உள்ளதோ அதுவே அடுத்த ஒரு வாரத்திற்கும் தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்வரை, மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்பட கூடாது, 

வக்ஃப் சொத்துக்களை அங்கீகரிப்பது அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வக்பு சட்டம் தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மேலும் வழக்கின் விசாரணை மே 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback