Breaking News

பாஜகவிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா? அரசியல் பரபரப்பு

அட்மின் மீடியா
0

பாஜகவிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா? அரசியல் பரபரப்பு

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரன் அவர்களை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்க போவதாக தகவல்கள் வருகிறது

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன .

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட விரிசல் தற்போது மீண்டும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இந்த பேச்சு அதிமுகவினர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனால், பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 45 நிமிடங்கள் பேசிவிட்டு சென்னை திரும்பினார்.

அதன்பின்னர் பாஜக கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback