Breaking News

நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா முழு விவரம்



புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது!

கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது. வெளியேறும் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 19ம் தேதி முடிவடைந்துவிட்டது. புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி பழைய சட்டத்தின் கீழ் அரசு ஏற்கனவே தொடங்கிய நிலையில், புதிய சட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு நடைமுறைகளைத் தொடங்க உள்ளது.

நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இது குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையின் அடிப்படையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரது தலைவர் ஒப்புதலுக்குக்காக அனுப்பி வைக்கபட்ட நிலையில், மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த பின் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 

புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback