சுற்றுசூழலை பாதுகாக்க பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் , டீசல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு
சுற்றுசூழலை பாதுகாக்க பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு
டெல்லியில் பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டதால், அவற்றுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பழைய வாகனங்களை கண்டறிய, பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை மந்திரி மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், "இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒரு பெட்ரோல் பங்க்கில் அதை செயல்படுத்தி, மற்றொரு பங்க்கில் செயல்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தால் என்ன பயன்? எனவேதான், அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டவுடன் திட்டத்தை செயல்படுத்தப்படும் என கூறினார்.
Tags: இந்திய செய்திகள்