Breaking News

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி கொடுக்க வேண்டாம்.. நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

அட்மின் மீடியா
0

அதிமுக நிலைப்பாடு குறித்து கட்சி தலைமை அனுமதி பெறாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

கழக நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டும். நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். 

கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும். ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback