பீகாரில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி முழு விவரம்
விரைவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராசின் இந்த திடீர் அறிவிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரான பசுபதி பராஸ், தனது அண்ணன் மறைவுக்கு பிறகு லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகி கடந்த 2022ஆம் ஆண்டு ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கினார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பசுபதி பராஸ் ஆதரவு அளித்து வந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட்டு வந்த ஹாஜிபூர் தொகுதியை அவரது அண்ணன் மகனான சிராஜ் பஸ்வானுக்கு பாஜக ஒதுக்கியது.
பீகாரை சேர்ந்த கட்சி ராஷ்டிரிய லோக் ஜனசக்தி. இக்கட்சியின் தலைவராக பசுபதி குமார் பாரா செயல்பட்டு வருகிறார்.
ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பசுபதி குமார் நேற்று அறிவித்துள்ளார்.
தலித் கட்சி என்பதால் எங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பசுபதி குற்றஞ்சாட்டி பா.ஜ.க. கூட்டணியில் விலகியுள்ளார். அதேபோல், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.வரும் சட்டமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், கொள்கை ஒத்துப்போனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய மந்திரி ஜித்தன் ராம் தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்