Breaking News

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுவேலைவாய்ப்பில் முன்னுரிமை - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

அட்மின் மீடியா
0

பொதுப்பணிகள்-2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரக் கிளையின் தீர்ப்பினை செயல்படுத்தும் பொருட்டு வெளியிடப்பட்ட வழிகாட்டு




நெறிமுறைகள் - திருத்தங்கள் வெளியிடப்படுகின்றன.


1. 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம்.

2 அரசாணை (நிலை) எண்.145, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (எஸ்) துறை, நாள் 30.09.2010.

3. அரசாணை (நிலை) எண்.40, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (எஸ்) துறை, நாள் 30.04.2014.

4. 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் (திருத்தச்) சட்டம்.

5. நீதிப்பேராணை மனு (MD) எண்.8025 / 2020-ல் 2203.2021 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் வழங்கப்பட்ட தீர்ப்பு

6. அரசாணை (நிலை) எண்.82, மனிதவா மேலாண்மை (எஸ்) துறை, நாள்: 16.08.2021

7. அரசாணை (நிலை) எண்.1, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள்: 02.01.2024.

8. நீதிப்பேராணை மனு எண்கள் 4129 மற்றும் 22818 / 2022-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 11.03.2024-ம் நாளிட்ட தீர்ப்பு

மேலே ஆறு மற்றும் ஏழாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

2 இப்பொருண்மை தொடர்பாக பல்வேறு வகைகளைச் சேர்ந்த மனுதாரர்களால் [நிலவொளிப் பள்ளிகளில் பயின்றவர்கள், நேரடியாக 2, 3, 4 அல்லது 5-ஆம் வகுப்புகளில் சேர்ந்து பள்ளிகளில் தொடர்ந்து பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், குடும்பச் சூழ்நிலை, வறுமை காரணமாக படிப்பினைத் தொடர முடியாமல் நேரடியாக 8-ஆம் வகுப்பு 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள்] தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டிற்கு தங்களையும் தகுதியுடையவர்கள் என ஆணை வெளியிடுமாறு கோரி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

3. இந்நிலையில், மேலே எட்டாவதாகப் படிக்கப்பட்ட வழக்கு எண்கள் W.P.Nos.4129 மற்றும் 22818/2022-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 11.032024-ஆம் நாளிட்ட தீர்ப்பில், நேரடியாக மூன்றாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து பயின்று தேர்ச்சி பெற்றவரை முதன்மை தேர்வுக்கு அனுமதிக்குமாறும், நிலவொளிப் பள்ளியில் பயின்றவருக்கு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமை அளிக்க சிறப்பு நிகழ்வாகக் கருதலாம் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மேற்படி தீர்ப்பின் பத்தி 13-ல் பின்வருமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

"13. In view of the above, the Government Order in GOMs.No.82, Human Resources Management (S) Department, dated 16082021 on the file of the 1st Respondent insofar as clause 4(iii) "only those who studied their entire education through out in Tamil medium viz, right from 1 standard upto prescribed qualification" is modified as "only those persons who have completed their entire education right from their schooling up to the qualification prescribed in the relevant service rules".

4 மேற்கண்ட நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலும், பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசு கவனமாக ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசுப் பணிநியமனங்களில், நேரடி நியமனத்திற்கான காலிப்பணியிடங்களில், இருபது விழுக்காடு (20%) பணியிடங்களை தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 82-ல், பத்தி 4-இல் (1) முதல் (xi) வரை உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பதிலாக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைத்து ஆணையிடுகிறது:-

(1) ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.

(ii) இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

(ii) ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும் மேற்படி சான்றிதழ்கள் பணியில் உள்ள அலுவலர்களால் மட்டும் அளிக்கப்படவேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

(iv) பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.

(v) பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வைப் பொறுத்தமட்டில் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

(vi) கல்வித் தகுதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

(vii) விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும். தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

(viii) தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை, இணைப்புகள்-1 மற்றும் II-ல் உள்ள படிவங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

(ix) பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / உரிய அலுவலரிடமிருந்தும், கல்லூரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லூரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

(x) தொடக்க நிலை (ஐந்தாம் வகுப்பு), உயர்நிலை (பத்தாம் வகுப்பு), மேல்நிலை வகுப்பு (பன்னிரண்டாம் வகுப்பு), பட்டயம் (Diploma), இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் ஆகிய கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) மாணவர்களின் பயிற்று மொழி (தமிழ்/ஆங்கிலம் /இதா மொழிகள்) கட்டாயம் குறிப்பிடப்படும் (இது தொடர்பாக தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் வெளியிடப்படும்).

(xi) தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்; மற்றும் தமிழ் பாடத்திலும், மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் (Cross Major Subject Degree in Tamil) பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback