நாம் தமிழர் கட்சி வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிப்பு!
நாம் தமிழர் கட்சி வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். 2026ம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதே பணிகளை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இடும்பாவனம் கார்த்திக் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்