வக்ப் திருத்த மசோதாவிற்க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் முழு விவரம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மசோதா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் எதிர்ப்பால், இது நாடாளுமன்ற இணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த குழு 655 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை தயாரித்தது. அதில் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் திருத்தம் செய்யப்பட்ட மசோதா கடந்த வாரம் மக்களவையும் மாநிலங்களவையும் நிறைவேறியது
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழ் மூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை, திமுக, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்