Breaking News

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

அட்மின் மீடியா
0
நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் மாதேஸ்வரம் போட்டியிட்டார். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கிய அவர் 4,62,036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செய்தி வெளியானது.



காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாதேஸ்வரன் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வசித்து வருகின்றார். இன்று (10.04.2025) அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. 

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இவ்விபத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது. 

இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் இன்று மதியம் சுமார் 13.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. 

மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback