Breaking News

எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அதிமுகவில் இருந்து திடீர் விலகல்! முழு விபரம்

அட்மின் மீடியா
0

எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அதிமுகவில் இருந்து திடீர் விலகல்! முழு விபரம்

அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் திடீரென அறிவித்துள்ளர். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்க கூடிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

அதிமுகவில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன்.

மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.. தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன்.‌எஸ்பி வேலுமணியின் வலது கரம்கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில்னது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்..பிரியமனமின்றி பிரிகிறேன். என்னை வாழ வைத்த அதிமுகவின் அன்பிற்கு என்றும் நான் அடையாளமாக இருப்பேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback