நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோடை காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் . அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வாகனம் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக (ஏப்ரல் - 1) நேற்று முதல் இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே இன்று முதல் கொடைக்கானல் பகுதிக்கு அனுமதிக்கப்படும் என்றும், வேலை நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் விடுமுறை நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்