Breaking News

அஞ்சல் காப்பீடு முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

 அஞ்சல் காப்பீடு முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோர், செய்யும் வணிகத்துக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.




வயது வரம்பு:-

18 வயது நிரம்பியவர்கள் அதிகபட்ச வயது வரம்பு இல்லை 

கல்வி தகுதி:-

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

நேரடி முகவர் (DIRECT AGENT) பணிக்கு:-

வேலை இல்லாதோர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

கள அலுவலர் (FIELD OFFICER) பணிக்கு :-

ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுவோர் ரூ 5000/- க்கு NSC அல்லது KVP பத்திரத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பித் தரப்படும். 

விருப்பமுள்ளோர் ஏப்ரல்-28 முதல் ஏப்ரல்-30 வரை பிற்பகல் 11 மணிக்கு புதுக்கோட்டை தலைமைதபால் நிலையம் எதிரில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர் காணலில் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரர்கள், தங்களின் கல்வி தகுதி/வயதுத் தகுதி, இருப்பிடச் சான்று/ஆதார் எண், Pan card இவற்றிற்கான அசல் மற்றும் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 04322-221220, 04322-220732 மற்றும் 80722-66355 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் புதுக்கோட்டை கோட்டம் புதுக்கோட்டை -622001

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback