நகை பணம் கேட்டு கணவனை அடித்து உதைக்கும் மனைவியும் மாமியாரும் வைரல் வீடியோ
மத்திய பிரதேசத்தில் ரயில்வேயில் லோகோ பைலட்டாக வேலை செய்யும் லோகேஷ் மஞ்சி தனது மனைவி ஹர்ஷிதா ராய்க்வார் மற்றும் மாமியாரும் சேர்ந்து நகை, பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும் தான் அதனை வீடியோவாக எடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா காவல் கண்காணிப்பாளரிடம் ரயில்வேயில் லோகோ பைலட் பணி செய்யும் லோகேஷ் மஞ்சி என்பவர் தனது மனைவி ஹர்ஷிதா ராய்க்வார் தன்னை உடல் ரீதியாக தாக்குவதாக புகார் அளித்துள்ளார்
கடந்த ஜூன் 2023 இல் ஹர்ஷிதா ராய்க்வாரை மணந்தார். திருமணமானதிலிருந்து தனது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் பணம் மற்றும் நகைகளை கேட்டு வருவதாக அவர் கூறுகிறார். மேலும், தனது மனைவி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்வதை கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
தனது மனைவி அடிப்பதை வீடியோவும் எடுத்து அதனையும் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில்
என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா" என்று கூறுகிறார். மேலும் அவரது மனைவி அவரை கொடூரமாகத் தாக்குவதைக் காணலாம். மற்றொரு பெண் அவளைத் தடுக்க முயன்றாலும், அவள் கேட்கவில்லை.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1907745251491484022
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ