Breaking News

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அட்மின் மீடியா
0

சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். டெல்லியில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்துப் பேசிய நிலையில் சென்னையிலும் சந்திப்பு. பா.ஜ.க. – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் நிர்மலாவை செங்கோட்டையன் தனியாக சந்தித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார் நிர்மலா சீதாராமன். அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளார். 

இதேபோல் இன்று அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback