Breaking News

இனி தமிழில் மட்டுமே அரசாணைகள்,அரசுப்பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

இனி தமிழில் மட்டுமே அரசாணைகள்,அரசுப்பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு


இனி தமிழில் மட்டுமே அரசாணைகள்,அரசுப்பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். பொதுமக்களுக்கு தமிழிலே பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு

தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் வெளியிடப்பட்ட அரசாணைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெளியான அரசானையில்:-

2. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும். அரசு அலுவலாங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுமாறு தங்களை கேட்டுக் கொள்ளப்படுகிற

அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும். சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்.

துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இலங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல் அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்.

அரசுப் பணியாளர்கள் அணைந்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையெப்பமிட வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகனாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசணைகளை தேவைப்படின் கூந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback