பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம்
தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவருக்கு போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் வேட்பு மனு செய்து இருந்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பாஜகவில் அண்ணமாலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார்
அதேபோல் தமிழிசை, சரத்குமார், தமிழிசை, எச்.ராஜா, ராம சீனிவாசன், கரு.நாகராஜன் எல்.முருகன், வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மிகுந்த கடந்தாண்டு MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு, பாஜகவில் எந்தப் பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை
Tags: அரசியல் அரசியல் செய்திகள்