மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது
அந்த தீர்ப்பில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது
சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானங்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு தனியாக என்ன அதிகாரம் உள்ளது? சட்டப்பேரவையின் மசோதாக்களை நிராகரிக்க ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் ஏதும் உள்ளதா?
இரண்டாவது முறையாக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் எனவும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் வெறுமனே உட்கார்ந்திருக்க மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என கூறிய நீதிபதிகள்
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது
Tags: அரசியல் செய்திகள்