கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா
நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், மறுபரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன
மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடதக்கது
Tags: மார்க்க செய்தி